Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
21/08/2025 Duración: 06minசீன அதிபர் திபெத்தை பார்வையிட்டார்; காசா மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது; பாகிஸ்தான், மற்றும் இந்திய காஷ்மீரில் பெருவெள்ளம்; உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை நிலவரம்; அர்ஜெண்டீனாவில் தஞ்சம் கோர பிரேசில் முன்னாள் அதிபர் முயற்சித்தார் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Fast Track முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குமாறு முன்னாள் குடிவரவு அமைச்சர் வலியுறுத்தல்
21/08/2025 Duración: 02minFast Track என்ற நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் பிரச்சினையை தீர்க்க லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு: தடுப்பது எப்படி?
21/08/2025 Duración: 11minஇளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படும் விகிதம் தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் தொடர்பிலும் இந்தப் போக்கினை தடுக்க முடியுமா என்பது தொடர்பிலும் கன்பராவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் பிரணவன் கணேசலிங்கம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
386 வயதான சென்னை
21/08/2025 Duración: 16minமெட்ராஸ் அல்லது சென்னை என்ற நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு சென்னை நகரம் 375 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் நடந்த சென்னை தின ஒருங்கிணைப்பாளர்கள் - வரலாற்றாசிரியர் S. முத்தையா, சமூக செய்தித்தாள்களை இயக்கி வரும் வின்சன்ட் டீ சொய்சா, மற்றும் ரேவதி ராம் அவர்களுடன், சென்னையில் நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நல்லி குப்புசாமி, தபால்துறை அதிகாரி S C பீமா ஆகியோர் மற்றும் சில சென்னைவாசிகள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குச் சொன்ன கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்தவர் குலசேகரம் சஞ்சயன். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
தமிழ் இலக்கியம், இந்தி மொழி, சமஸ்கிருதம்: மறைந்த இல.கணேசனின் கருத்துக்கள் என்ன?
21/08/2025 Duración: 13minஇந்தியாவில் நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட்) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் ஆஸ்திரேலியாவுக்கு 2014 செப்டம்பர் மாதம் வருகை தந்திருந்தபோது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து வழங்கிய நீண்ட நேர்முகத்தின் சுருக்கமான பதிவு. அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2.
-
உற்பத்தித் திறன் உச்சி மாநாட்டின் முதல் இரண்டு நாட்களில் என்ன நடந்தன?
21/08/2025 Duración: 09minஉயர்மட்ட பொருளாதார வல்லுனர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வாரம் கன்பராவில், ஆஸ்திரேலியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான தேசிய வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள கூடினார்கள். மற்றைய முன்னேறிய பொருளாதார நாடுகளைப் போலவே கடந்த பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து குறைந்த உற்பத்தித் திறன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வட்ட மேசை மாநாட்டில் யதார்த்தமான, ஆனால் நம்பிக்கையான எதிர்பார்ப்பு உள்ளது என்று கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers கூறியிருந்தார். அவர் எதிர்பார்த்தது அவருக்குக் கிடைத்ததா? மூன்று நாள் உச்சி மாநாட்டின் முதல் இரண்டு நாட்கள் குறித்த செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
காஸா நகரத்தின் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது
21/08/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 21/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கை இனப்பிரச்சனை, தமிழ் மீனவர் பிரச்சனை: மறைந்த இல.கணேசனின் கருத்துக்கள் என்ன?
20/08/2025 Duración: 10minஇந்தியாவில் நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட்) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் ஆஸ்திரேலியாவுக்கு 2014 செப்டம்பர் மாதம் வருகை தந்திருந்தபோது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து வழங்கிய நீண்ட நேர்முகத்தின் சுருக்கமான பதிவு. அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1.
-
ஆஸ்திரேலிய விசாவுக்கு தேவைப்படும் ஆங்கிலத் தேர்வில் வந்துள்ள மாற்றம் என்ன?
20/08/2025 Duración: 10minஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரவோ, படிக்கவோ விரும்புகின்றவர்கள், தங்கள் ஆங்கில மொழித் திறனை நிருபிக்க எழுத வேண்டிய ஆங்கில தேர்வுகளில் ஒன்றான PTE (Pearson Test of English Academic) ஸ்கோர் குறித்து நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
-
Qantas விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 90 மில்லியன் டொலர் அபராதம்
20/08/2025 Duración: 09minஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணி நீக்க வழக்கு என்று அழைக்கப்படும், Qantas விமான நிறுவனத்தின் மீதான வழக்கில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் மீது உச்ச நீதிமன்றம் 90 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
'ஆஸ்திரேலிய பிரதமர் இஸ்ரேலை வஞ்சித்துவிட்டார்' - இஸ்ரேலிய பிரதமர்.
20/08/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மாகாண சபை தேர்தல்: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?
19/08/2025 Duración: 06minஇலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலை நடத்தவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
மூன்று-நாள் பொருளாதார சீர்திருத்த வட்ட மேசை மாநாடு தொடங்குகிறது
19/08/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 19/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
'Society is fragmenting': What's behind rising levels of hatred? - 'சமூகம் துண்டு துண்டாகப் பிரிகிறது': வெறுப்பின் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது?
18/08/2025 Duración: 07minReported incidents of hatred are on the rise, and key organisations say they are just the 'tip of the iceberg'. What's driving the increase? - வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த முறைப்பாடுகளும் அதிகரிக்கின்றன. அவையெல்லாம், நீருக்கடியில் இருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே வெளியே தெரிவதைப் போன்றது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அதிகரிப்பிற்கு என்ன காரணம்?
-
ஆஸ்திரேலியாவின் பணக்கார வீட்டு உரிமையாளர்களில் பலர் முதியோர் ஓய்வூதியமும் பெறுகிறார்களா?
18/08/2025 Duración: 06minஆஸ்திரேலியாவில் அரசு வழங்கும் Age Pension பல முதியவர்களின் பிரதான வருமான ஆதாரமாக இருக்கிறது. ஆனால், செல்வம் படைத்த மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளைத் தவிர கணிசமான சொத்துக்களையும் கொண்டிருந்தாலும், ஓய்வூதியம் கோருகின்றனர் என்று சமூக சேவைகள் அமைச்சர் Tanya Plibersekற்கு அவருடைய துறை சார் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர் என்றும், அது குறித்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளதாகவும் Australian Financial Review செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
யுக்ரேன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த விரும்பும் அமெரிக்க அதிபர்; வாஷிங்டனில் ஐரோப்பிய தலைவர்கள்
18/08/2025 Duración: 03minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 18 ஜனவரி 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
17/08/2025 Duración: 10min2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு - வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தியின் யாத்திரை தொடக்கம்; இந்திய அமலாக்கத்துறையின் தொடர் சோதனைகள் - நெருக்கடியில் திமுக?; சென்னை மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்புகளை ஏற்படுத்திய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த உணவகம் விருது வென்ற ‘சோழமண்டல உணவகம்'
17/08/2025 Duración: 10minதென்கிழக்கு இந்தியாவின் கோரமண்டல் உணவு வகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அடிலெய்ட் நகரின் முதல் உணவகம் என்று தம்மை அறிமுகப்படுத்தும் Logical Indian என்ற உணவகம், ‘2025 Restaurant & Catering Hostplus Awards for Excellence’ தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த இந்திய உணவகத்திற்கு வழங்கும் விருதை வென்றுள்ளது. தமிழர் உணவுகளைப் பரிமாறும் ஒரு உணவகம் இந்த விருதை தெற்கு ஆஸ்திரேலியாவில் வென்றிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவகத்தின் உரிமையாளரும், சமையல் கலை நிபுணருமான மேர்வின் ஜோஷூவா அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் யாராகஇருந்தாலும் வேலையில் ஒருவருக்கு சிக்கல் எழுந்தால் என்ன செய்யலாம்?
17/08/2025 Duración: 18minஆஸ்திரேலியாவில் தொழிலாளிக்கு இருக்கின்ற உரிமைகள் என்ன, வேலைக்கான கூலியை வங்கி வழியாக வாங்காமல், நேரடியாக பணமாக பெற்றுகொள்ளலாமா, Fair Workயிடம் எப்படி புகார் தருவது என்று விளக்குகிறார் ஆஸ்திரேலிய Fair Work Ombudsman Anna Booth அவர்கள். அவரோடு உரையாடியவர் Sandya Veduri; தமிழில் றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
16/08/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (10 – 16 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 16 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.