Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
விக்டோரியாவில் துப்பாக்கிச் சூடு: இரு காவல்துறையினர் பலி, துப்பாக்கிதாரி தப்பியோட்டம்!
26/08/2025 Duración: 02minவிக்டோரியாவின் Porepunkah அருகே இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அமெரிக்காவுக்கு பொதி(parcel) அனுப்பும் சேவையை இடைநிறுத்திய Australia Post- பின்னணி என்ன?
26/08/2025 Duración: 02minஅமெரிக்கா மற்றும் Puerto Ricoக்கு பார்சல் - பொதிகளை அனுப்பும் சேவையை Australia Post தற்காலிகமாக நிறுத்துகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
5% வைப்புத் தொகையுடன் வீடு வாங்கும் திட்டம்: அரசு நடைமுறைப்படுத்தும் மாற்றம் என்ன?
26/08/2025 Duración: 07minநாட்டிலுள்ள அனைத்து first home buyersஉம் அதாவது தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களும் 5 சதவீத deposit- வைப்புத் தொகையுடன் ஒரு வீட்டை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் திட்டத்தை Albanese அரசு எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்த உள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஒரு 'துயரமான விபத்து' - இஸ்ரேலிய பிரதமர்
26/08/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
வாலாட்டி & வாழ்வின் வழிகாட்டி: சர்வதேச நாய் தினம்
25/08/2025 Duración: 14minஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச நாய் தினம், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான சிறப்புப் பிணைப்பைப் போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர் விசுவாசத் திட்டங்களின் எதிர்காலம் என்ன?
25/08/2025 Duración: 07minஆஸ்திரேலியாவில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களுக்கு அறவிடப்படும் கூடுதல் கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலிய ரசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, customer loyalty programs என்ற வாடிக்கையாளர் விசுவாசத் திட்டங்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் முதலாவது வீடு வாங்குவோருக்கான அரச சலுகை அக்டோபரில் ஆரம்பம்
25/08/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
திறக்கப்படவிருக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையம்: சிறப்புகள் என்ன?
25/08/2025 Duración: 10minஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக இருக்கப்போகிறது திறக்கப்படவிருக்கும் Western Sydney International Airport- சிட்னி மேற்கு சர்வதேச விமான நிலையம். இந்த மிக நவீன விமான நிலையத்தின் சிறப்புகளை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
24/08/2025 Duración: 10minஇந்திய தேசத்தை இரண்டாகிய தெரு நாய் விவகாரம் - இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; தவெகவின் மதுரை மாநாடு - எதிர்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள்; ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - மீனவர்கள் போராட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
செக்ஸ் தொழிலாளியுடன் உறவு கொள்வதில் எழும் சிக்கல் என்ன?
24/08/2025 Duración: 11minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் செக்ஸ் தொழிலாளியுடன் உறவு கொள்வதில் எழும் சிக்கல் குறித்து அவர் விளக்குகிறார். தொடரின் எட்டாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைதும் அதன் பின்னணியும்
23/08/2025 Duración: 04minஅரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணிலுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
23/08/2025 Duración: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (17 – 23 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 23 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
Understand Aboriginal land rights in Australia - பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் நீரிணை தீவு மக்களின் நில உரிமைகள் என்றால் என்ன?
22/08/2025 Duración: 08minYou may hear the protest chant, “what do we want? Land rights!” —but what does it really mean? Land is at the heart of Aboriginal and Torres Strait Islander identity, culture, and wellbeing. Known as “Country,” it includes land, waterways, skies, and all living things. In this episode of Australia Explained, we explore Indigenous land rights—what they involve, which land is covered, who can make claims, and the impact on First Nations communities. - “வேண்டும் வேண்டும்...... நில உரிமைகள் வேண்டும்?" என்ற கோஷத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அதன் உண்மையான அர்த்தம் என்ன? பூர்வீகக்குடி மக்கள் மற்றும் Torres Strait தீவு மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் நல்வாழ்வின் இதயத்தில் உள்ள விடயம் - நாடு. அவர்களது பார்வையில் நிலம், நீர்வழிகள், வானம் மற்றும் அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியது "நாடு." ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இன்றைய நிகழ்ச்சியில், பூர்வீக நில உரிமைகள் குறித்து நாங்கள் ஆராய்வோம். அவை எதை உள்ளடக்கியது, எந்த நிலத்தை யார் உரிமை கோர முடியும், மற்றும் அதனால் பூர்வீகக்குடி மக்கள் மீதான தாக்கம் என்ன
-
விக்டோரியாவில் இந்தியப் பெண் கொலை: முன்னாள் கணவன் கைது!
22/08/2025 Duración: 02minவிக்டோரியாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 45 வயது நபரான பிரேம்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை
22/08/2025 Duración: 12minஇலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டிக்ஸ்ரன் அருள்ரூபன் மற்றும் ரீட்டா அருள்ரூபன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Thriving Kids: NDIS தொடர்பிலான புதிய அறிவிப்புகள்
22/08/2025 Duración: 06minஅரசானது NDIS தொடர்பில் சில முக்கியமான புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் மாற்றங்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் வளர்ச்சி, முழுமையான சேவை அணுகல், மற்றும் தொடர்ச்சியான தர மேம்பாடு ஆகிய துறைகளில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
குழந்தை பராமரிப்புத் துறைக்கு 189 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு?
22/08/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 22/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
21/08/2025 Duración: 08minயாழ்ப்பாணம். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்போவதாக அரசு அறிவிப்பு; அரசுக்கு எதிராக பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
21/08/2025 Duración: 06minசீன அதிபர் திபெத்தை பார்வையிட்டார்; காசா மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது; பாகிஸ்தான், மற்றும் இந்திய காஷ்மீரில் பெருவெள்ளம்; உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை நிலவரம்; அர்ஜெண்டீனாவில் தஞ்சம் கோர பிரேசில் முன்னாள் அதிபர் முயற்சித்தார் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Fast Track முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குமாறு முன்னாள் குடிவரவு அமைச்சர் வலியுறுத்தல்
21/08/2025 Duración: 02minFast Track என்ற நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் பிரச்சினையை தீர்க்க லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.