Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Skilled Migration Program: ஆஸ்திரேலியாவின் எந்த மாநிலத்தில் குடியேற விண்ணப்பிக்கலாம்?
11/11/2025 Duración: 03minSkilled Migration திட்டத்திற்கென ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஒதுக்கீடுகள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
11/11/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 11/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
Road trips in Australia: What you need to know before hitting the road - ஆஸ்திரேலியாவில் நெடுந்தூர சாலைப்பயணங்களை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை
10/11/2025 Duración: 08minThere’s no better way to experience Australia than hitting the road. Between the wide-open landscapes, country bakery pies, and unexpected wildlife, a road trip lets you take in the country at your own pace. But even if you’ve driven overseas, Australia comes with its own set of challenges, especially when you venture off the beaten path. - ஆஸ்திரேலியாவில் நெடுந்தூர சாலைப்பயணங்களை மேற்கொள்வதற்கு நீங்கள் எவ்வாறு தயாராகி, பாதுகாப்பாக இருந்து உங்கள் பயணத்தை சிறப்பாக அனுபவிக்கலாம் என்பது குறித்து Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
துரிதமாக செய்துகொள்ளக்கூடிய இட்லி செய்முறை!
10/11/2025 Duración: 08minஉணவு சமைப்பதற்கு போதிய நேரம் இல்லாதபோது துரிதமாக செய்துகொள்ளக்கூடிய இட்லி செய்முறை ஒன்றை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : ஊதியம் வழங்கும் போதே இனி சூப்பர் — புதிய Payday Super சட்டம்!
10/11/2025 Duración: 06min2026 ஜூலை முதல், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நேரத்திலேயே அவர்களது super தொகையும் செலுத்தப்பட வலியுறுத்தும் “Payday Superannuation” சட்டமுன்வடிவு பெடரல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
விஜயின் அரசியல் & திமுகவில் குடும்ப அரசியலா - ஆ. ராசா பதில்
10/11/2025 Duración: 20minஇந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அவர்கள் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பதவி விகிக்கின்றார். ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த ஆ. ராசா அவர்களை SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2.
-
செக்ஸ்: பெற்றோரின் புரிதலின்மை எப்படி குழந்தைகளைப் பாதிக்கும்?
10/11/2025 Duración: 11minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் செக்ஸ் தொடர்பாக பெற்றோர்களுக்கு இருக்கும் புரிதலின்மை எப்படி குழந்தைகளின் வளர்ச்சியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார். தொடரின் பத்தாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
இன்றைய செய்திகள்: 10 நவம்பர் 2025 - திங்கட்கிழமை
10/11/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 10/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
09/11/2025 Duración: 09minஇந்தியா முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க இந்தியா உச்சநீதிமன்றம் உத்தரவு; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு; தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - தவெக தலைமையில் கூட்டணி! இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
‘சாதி பார்க்கும் மக்களின் மனநிலை மாறாமல் கட்சிகள் சாதியை தாண்ட இயலாது’ - ஆ. ராசா
09/11/2025 Duración: 19minஇந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அவர்கள் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பதவி விகிக்கின்றார். ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த ஆ. ராசா அவர்களை SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (2 – 8 நவம்பர் 2025)
07/11/2025 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (2 – 8 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
'You're suing the police?': Changing responses to racism in the African diaspora - ஆப்பிரிக்க வம்சாவளியினரின் இனவெறிக்கு எதிரான புதிய அணுகுமுறை!
07/11/2025 Duración: 07minFor people of African descent, experiences of racism and discrimination are varied. How are different generations coming together to understand and address the issue? - ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கு, இனவெறி மற்றும் பாகுபாடு அனுபவங்கள் பல்வேறு வகையாக உள்ளன. பல்வேறு தலைமுறைகள் இந்த பிரச்சினையைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை காண ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எவ்வாறு அதைச் செய்கிறார்கள்? Nick Zoumboulis ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவில் பெண் கலைஞர்களின் இசைவிழா!
07/11/2025 Duración: 10minShakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஏற்பாடும் செய்யும் பெர்த் நகரைச் சார்ந்த பிரபல வீணை இசைக் கலைஞர் யசோ பொன்னுதுரை அவர்கள் அவரின் கலைப் பயணம் தொடர்பாகவும், இந்த நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
AI - செயற்கை நுண்ணறிவினால் எந்த வேலைகளுக்கு ஆபத்து? நன்மை?
07/11/2025 Duración: 13minAI எனப்படும் Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவின் பெரும் பாய்ச்சலை உலகம் சந்தித்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் AI வரவினால் அதிக ஆபத்தில் உள்ள வேலைகள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு எனக்கும் வியாபிக்கும் நிலையில் தனிநபர் தனது தனிப்பட்ட தகவல்களைப் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். சுகன்யா அவர்கள் முன்வைக்கும் தகவல்களும், ஆலோசனைகளும் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
இன்றைய செய்திகள்: 07 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
07/11/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 07/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
06/11/2025 Duración: 08minஇலங்கையில் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை மற்றும் மக்கள் எதிர்ப்பை அடுத்து மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நிறுத்த அதிபர் அனுரகுமார திசநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு வரவேற்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
06/11/2025 Duración: 07minநியூயார்க் மேயராக சோஹ்ரான் மம்தானி; காசா நிலை; கல்மேகி புயல்: பிலிப்பைன்சில் 114 பேர் பலி; ஆப்கான் நிலநடுக்கம்; மீண்டும் அணு ஆயுத சோதனைகள்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
New York மேயராகும் இஸ்லாமியர் Mamdaniயின் பின்னணி என்ன?
06/11/2025 Duración: 08minZohran Mamdani - நியூயார்க் நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இந்திய, இஸ்லாமிய மற்றும் தென் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நபராக வரலாறு படைத்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
குறைந்த விலையில் தரமான வீடுகள் !!
06/11/2025 Duración: 12minஇந்தியாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலிவான ஆனால் தரமான வீடுகள் கட்டி தரும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழகத்தில் வாழும் பொறியியலாளர் மதன்ராஜ் அவர்கள். தன்னுடைய கண்டுபிடிப்பை "உறையுள்" என்று அழைக்கும் மதன்ராஜ் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விரிவாக உரையாடுகிறார். அவரோடு உரையாடுபவர் செல்வி.
-
செய்தியின் பின்னணி : மூன்று மணி நேரம் இலவச மின்சாரம் – யாருக்கு, எப்படி?
06/11/2025 Duración: 08minSolar - சூரிய ஒளி ஆற்றலை மக்களிடம் நேரடியாக பகிர பெடரல் அரசு புதிய ‘Solar Sharer’ திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.