Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Medicare Bulk billing-க்கு $8.5 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்குவோம் - லேபர்
24/02/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
“ஆயிரக்கணக்கானோருக்கு அவசரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை”: எதிர்கட்சியின் குற்றச்சாட்டும், அரசின் பதிலும்
23/02/2025 Duración: 06minஆயிரக்கணக்கானோருக்கு அரசு அவசரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை தருகிறது என்று எதிர்கட்சி முனவைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக எழுந்திருக்கும் அரசியல் சர்ச்சை குறித்த “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. முன்வைப்பவர் றைசெல்.
-
BBC “ஆனந்தி அக்கா” SBS தமிழுக்கு வழங்கிய நேர்முகம்!
23/02/2025 Duración: 13min“ஆனந்தி அக்கா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட பிபிசி தமிழோசையின் முன்னாள் ஊடகவியலாளர் திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியப்பிரகாசம் அவர்கள் லண்டனில் காலமானார். பிபிசி தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அவர் 2005 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அவ்வேளையில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆனந்தி அவர்களை SBS தமிழ் ஒலிபரப்புக்காக நேர்முகம் கண்டவர் றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
21/02/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (16 – 22 பெப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 22 பெப்ரவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
மார்ச் முதல் சுமார் 50 லட்சம் பேருக்கு Centrelink கொடுப்பனவு அதிகரிப்பு
21/02/2025 Duración: 02minஓய்வூதியம் பெறுபவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு அடுத்த மாதம் அவர்களின் Centrelink கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள்
21/02/2025 Duración: 12minஇன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் முகமாக சனிக்கிழமை தோறும் நடைபெறும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலைக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ் கற்கும் அனுபவங்களை பதிவுசெய்தோம். ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வழங்கும் தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பிக்கும் அனுபவ பகிர்வுடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
21/02/2025 Duración: 08minஇலங்கையின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; கொழும்பில் நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது; உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான செயற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தியுள்ளது உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமதுஇலங்கைச் செய்தியாளர் மதிவாணன்
-
இங்கிருந்து சில வெளிநாடுகளை விமர்சிப்பவர்களை அந்த நாடுகள் தீர்த்துக் கட்ட திட்டம் – ASIO
21/02/2025 Duración: 06minஆஸ்திரேலியாவில் பல்வேறு வழிகளில் பாதுகாப்பு சவால்கள் வெளிவருகின்றன என்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களை குறைந்தது மூன்று நாடுகள் குறிவைத்து, எதிர்ப்பாளர்களை கொல்லும் சதித்திட்டங்களை ASIO முறியடித்துள்ளது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு உரையில் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
தேர்தல் வாக்குகளுக்காக லேபர் அரசு அவசரமாக குடியுரிமை வழங்குகிறது - Peter Dutton
21/02/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஒலிபரப்பாளர் முதல் SLBC இயக்குனர் வரை
20/02/2025 Duración: 17minதிருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு கலைஞர். கர்நாடக சங்கீதம், வீணை, பரதநாட்டியம் என்று பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். எவரும் துணியாத பல நிகழ்ச்சிகளைத் தனது முயற்சியால் மேடையேற்றி, இரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சக கலைஞர்களினதும் பேராதரவைப் பெற்றவர். இலங்கை அரசு வழங்கும் கலாசூரி தேசிய விருது முதல் பல விருதுகளை வென்றுள்ள இவர், பணித் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இறக்கும் வரை பணி செய்வதிலிருந்து ஓயவில்லை.
-
ஆஸ்திரேலியா அறிவோம் : உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை!
20/02/2025 Duración: 09minஉலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்றும், சீனப் பெருஞ்சுவரை விடவும் பெரியது என்றும், விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு பெரியதுமான “வாழும் அதிசயம்” என்று பல பெருமைகளுக்குரியது ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள Great Barrier Reef எனப்படும் பேரரண் பவளப்பாறைத் திட்டு (Great Barrier Reef). இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். இந்நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. இப்போது (2025) மீண்டும் பதிவிடப்படுகிறது.
-
விக்டோரியா மாநிலத்தில் மூவாயிரம் அரசு ஊழியர்களை குறைக்க அரசு திட்டம்!
20/02/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
சிட்னியில் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் சர்வதேச மாணவன் பலி!
19/02/2025 Duración: 02minசிட்னியில் வாழ்ந்து வந்த ஒரு இளம் சர்வதேச மாணவர், மின்-பைக் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
“பாஸ்மதி அரிசி” – பெயர் யாருக்கு சொந்தம்? இந்தியா–பாகிஸ்தான் மோதல் வலுக்கிறது!
19/02/2025 Duración: 08minஉலகில் உணவு பொருளின் பெயர்களுக்கு நாடுகள் உரிமை கோருவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது “பாஸ்மதி அரிசி” பெயர் யாருக்கு சொந்தம் என்ற சட்ட ரீதியான போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கியுள்ளன. இது குறித்த “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார்: றைசெல்.
-
Jagaveer: From Australia to Kollywood – A journey of passion and perseverance - ஆஸ்திரேலியத் தமிழர் “2K Love Story” படத்தின் கதாநாயகனானது எப்படி?
19/02/2025 Duración: 19minJagaveer, the lead actor of 2K Love Story, took an unconventional path, leaving Australia to pursue his passion for cinema in the Tamil film industry in Chennai. In this interview, he shares his journey into films, the challenges of reverse migration, and his future in the industry with RaySel. - தமிழ்நாட்டில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் வெளியான “2K லவ் ஸ்டோரி” திரைப்படத்தின் கதாநாயகன் ஆஸ்திரேலியத் தமிழர் ஜகவீர் அவர்கள். ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பி தனது திரையுலக கனவை நிறைவேற்றத் துவங்கியிருக்கும் ஜகவீர் அவர்கள், தனது பயணம், எதிர்காலத் திட்டங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் மோதினால் உலகம் அழிந்துவிடுமா?
19/02/2025 Duración: 09minவிண்வெளியிலிருந்து பாய்ந்துவரும் Asteroid 2024 Y-R-4 விண்கல் பூமி மீது மோதும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் உலகம் அழிந்துவிடும் வாய்ப்பு உண்டா என்று எழுகின்ற கேள்விகளோடு தயாரிக்கப்பட்ட விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Sam Dover. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
-
ரிசர்வ் வங்கியின் வட்டி வீதக் குறைப்பு - நமக்கு நன்மை தருமா? பாதிக்குமா?
19/02/2025 Duración: 13minகடந்த செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி பண விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்தது. இதன் பின்னணி காரணம் மற்றும் இதனால் வீட்டுச் சந்தையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக அலசுகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
சத்குரு சாயின் வரலாற்றை மேடையேற்றும் பரதநாட்டிய நிகழ்வு!
19/02/2025 Duración: 05minAusTam Fine Arts எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி "சத்குரு சாய்" என்ற பரதநாட்டிய நடன நிகழ்ச்சி ஒன்றை அரேங்கேற்றவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவலை எமது ஒலிப்பதிவுக்கூடம் வரை வந்து பகிர்ந்து கொள்கிறார் AusTam Fine Arts-இன் அஸ்விதா செந்தில்குமரன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இந்த வார தமிழ்நாட்டின் பேசுபொருள்!
19/02/2025 Duración: 08minதமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு என்ற குற்றச்சாட்டு மற்றும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
நாட்டின் முக்கிய வங்கிகள் 8 நாட்களில் வட்டி வீதத்தை குறைக்கின்றன!
19/02/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 19/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.