Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 71:22:20
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • 3.3 மில்லியன் முதல் பரிசு வென்ற அதிஷ்டசாலியை தேடுகிறது Saturday Lotto!

    25/02/2025 Duración: 02min

    NSW-ஐ சேர்ந்த ஒருவர் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற Saturday Lotto அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக சுமார் $3.3 மில்லியன் டாலர்கள் வென்றுள்ளார். இவரை Lotto தொடர்புக்கொள்ள தேடி வருகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் ஆளும் லேபர் கட்சி தொடர்ந்து பின்னடைவு!

    25/02/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் NSW-இல் வாகனம் ஓட்டலாமா?

    24/02/2025 Duración: 03min

    ஆஸ்திரேலியாவின் மற்றைய மாநிலம் அல்லது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் NSW மாநிலத்தில் வாகனம் ஓட்ட விரும்பினால் NSW சாலை விதிகளைப் பின்பற்றும் பட்சத்தில் முதல் 3 அல்லது 6 மாதங்களுக்கு NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டலாம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Breast Cancer Awareness : Can breast cancer be prevented? - மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா?

    24/02/2025 Duración: 10min

    How often should you self-check your breasts? And what should you look for? Is breast cancer preventable? Sydney Chris O'Brien Lifehouse’s Breast Surgeon Associate Prof Sanjay Warrier spoke with Selvi on SBS Tamil program about breast cancer awareness and preventive measures. - மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும் வழிமுறைகள் மற்றும் குறிப்பாக தெற்காசிய பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வாக இருக்கும் வழிமுறைகளையும் சிட்னியில் Chris O'Brien Lifehouse-இல் முன்னணி மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் இணை பேராசிரியர் டாக்டர் Sanjay Warrier அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கும் விரிவான விளக்கத்துடன் விவரணம் ஒன்றை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    24/02/2025 Duración: 10min

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் மும்மொழி கொள்கை, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகியான காளியம்மாள் விலகல் மற்றும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்கிறாரா புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி? போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • Medicare Bulk billing-க்கு $8.5 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்குவோம் - லேபர்

    24/02/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • “ஆயிரக்கணக்கானோருக்கு அவசரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை”: எதிர்கட்சியின் குற்றச்சாட்டும், அரசின் பதிலும்

    23/02/2025 Duración: 06min

    ஆயிரக்கணக்கானோருக்கு அரசு அவசரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை தருகிறது என்று எதிர்கட்சி முனவைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக எழுந்திருக்கும் அரசியல் சர்ச்சை குறித்த “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. முன்வைப்பவர் றைசெல்.

  • BBC “ஆனந்தி அக்கா” SBS தமிழுக்கு வழங்கிய நேர்முகம்!

    23/02/2025 Duración: 13min

    “ஆனந்தி அக்கா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட பிபிசி தமிழோசையின் முன்னாள் ஊடகவியலாளர் திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியப்பிரகாசம் அவர்கள் லண்டனில் காலமானார். பிபிசி தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அவர் 2005 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அவ்வேளையில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆனந்தி அவர்களை SBS தமிழ் ஒலிபரப்புக்காக நேர்முகம் கண்டவர் றைசெல்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    21/02/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (16 – 22 பெப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 22 பெப்ரவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • மார்ச் முதல் சுமார் 50 லட்சம் பேருக்கு Centrelink கொடுப்பனவு அதிகரிப்பு

    21/02/2025 Duración: 02min

    ஓய்வூதியம் பெறுபவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு அடுத்த மாதம் அவர்களின் Centrelink கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள்

    21/02/2025 Duración: 12min

    இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் முகமாக சனிக்கிழமை தோறும் நடைபெறும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலைக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ் கற்கும் அனுபவங்களை பதிவுசெய்தோம். ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வழங்கும் தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பிக்கும் அனுபவ பகிர்வுடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    21/02/2025 Duración: 08min

    இலங்கையின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; கொழும்பில் நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது; உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான செயற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தியுள்ளது உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமதுஇலங்கைச் செய்தியாளர் மதிவாணன்

  • இங்கிருந்து சில வெளிநாடுகளை விமர்சிப்பவர்களை அந்த நாடுகள் தீர்த்துக் கட்ட திட்டம் – ASIO

    21/02/2025 Duración: 06min

    ஆஸ்திரேலியாவில் பல்வேறு வழிகளில் பாதுகாப்பு சவால்கள் வெளிவருகின்றன என்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களை குறைந்தது மூன்று நாடுகள் குறிவைத்து, எதிர்ப்பாளர்களை கொல்லும் சதித்திட்டங்களை ASIO முறியடித்துள்ளது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு உரையில் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • தேர்தல் வாக்குகளுக்காக லேபர் அரசு அவசரமாக குடியுரிமை வழங்குகிறது - Peter Dutton

    21/02/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • ஒலிபரப்பாளர் முதல் SLBC இயக்குனர் வரை

    20/02/2025 Duración: 17min

    திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு கலைஞர். கர்நாடக சங்கீதம், வீணை, பரதநாட்டியம் என்று பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். எவரும் துணியாத பல நிகழ்ச்சிகளைத் தனது முயற்சியால் மேடையேற்றி, இரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சக கலைஞர்களினதும் பேராதரவைப் பெற்றவர். இலங்கை அரசு வழங்கும் கலாசூரி தேசிய விருது முதல் பல விருதுகளை வென்றுள்ள இவர், பணித் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இறக்கும் வரை பணி செய்வதிலிருந்து ஓயவில்லை.

  • ஆஸ்திரேலியா அறிவோம் : உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை!

    20/02/2025 Duración: 09min

    உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்றும், சீனப் பெருஞ்சுவரை விடவும் பெரியது என்றும், விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு பெரியதுமான “வாழும் அதிசயம்” என்று பல பெருமைகளுக்குரியது ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள Great Barrier Reef எனப்படும் பேரரண் பவளப்பாறைத் திட்டு (Great Barrier Reef). இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். இந்நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. இப்போது (2025) மீண்டும் பதிவிடப்படுகிறது.

  • விக்டோரியா மாநிலத்தில் மூவாயிரம் அரசு ஊழியர்களை குறைக்க அரசு திட்டம்!

    20/02/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • சிட்னியில் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் சர்வதேச மாணவன் பலி!

    19/02/2025 Duración: 02min

    சிட்னியில் வாழ்ந்து வந்த ஒரு இளம் சர்வதேச மாணவர், மின்-பைக் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • “பாஸ்மதி அரிசி” – பெயர் யாருக்கு சொந்தம்? இந்தியா–பாகிஸ்தான் மோதல் வலுக்கிறது!

    19/02/2025 Duración: 08min

    உலகில் உணவு பொருளின் பெயர்களுக்கு நாடுகள் உரிமை கோருவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது “பாஸ்மதி அரிசி” பெயர் யாருக்கு சொந்தம் என்ற சட்ட ரீதியான போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கியுள்ளன. இது குறித்த “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார்: றைசெல்.

  • Jagaveer: From Australia to Kollywood – A journey of passion and perseverance - ஆஸ்திரேலியத் தமிழர் “2K Love Story” படத்தின் கதாநாயகனானது எப்படி?

    19/02/2025 Duración: 19min

    Jagaveer, the lead actor of 2K Love Story, took an unconventional path, leaving Australia to pursue his passion for cinema in the Tamil film industry in Chennai. In this interview, he shares his journey into films, the challenges of reverse migration, and his future in the industry with RaySel. - தமிழ்நாட்டில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் வெளியான “2K லவ் ஸ்டோரி” திரைப்படத்தின் கதாநாயகன் ஆஸ்திரேலியத் தமிழர் ஜகவீர் அவர்கள். ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பி தனது திரையுலக கனவை நிறைவேற்றத் துவங்கியிருக்கும் ஜகவீர் அவர்கள், தனது பயணம், எதிர்காலத் திட்டங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

página 23 de 28